திட்டக்குடி ஜமாத் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டது 

 

கடலூர் மாவட்டம்  திட்டக்குயில் ஜமாத்துலா சார்பில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசலில் கொரோனா நிவாரான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 


 

நிகழ்ச்சிக்கு தமுமுக மமக தலைவர் சலிம் ஹாஜியார் தலைமை தாங்கினார்.

 

துணை தலைவர் ஜாண்பாஷா ஹாஜீயார்,செயலாளர் அஜிஸ் பாய் கட்டிட கமிட்டி செயலாளர் எம்.ஹச் அஸ்கர்அலி முன்னிலை வகித்தனர்.

 

சிறப்பு அழைப்பாளராக பள்ளி இமாமும் தமுமுக கடலூர் மாவட்ட உலாமா அணி பொருளாலர் மொளலானா நஜீருல்லாஹ் மிஸ்பாஹி, மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமிது கலந்து கொண்டு 3000 மதிப்புள்ள அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், வேட்டிசட்டை சேலை மற்றும் 500 ரூபாய் நிதி 50 பேருக்கு வழங்கப்பட்டது.

 

இதில் கட்டிட கமிட்டி நிர்வாகிகள் தஸ்தகீர் பாய்,ஜாஹிர் உசேன், ஜமாத் நிர்வாகிகள் ஐயூப்பாய், ஜாபர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.