நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற பேரவைக்கு இன்பதுரை எம்.எல்.ஏ., மீண்டும் நியமனம்







 

தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:~

 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை  மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

கடந்த மூன்றாண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக பதவி வகித்த இன்பதுரை எம்எல்ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இன்பதுரையுடன் கன்னியாகுமரி எம்எல்ஏ எஸ்.ஆஸ்டினும் தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக நியமிக்கபட்டுள்ளார். இவர்கள் இருவரும் வருகிற 2021 ஆம் ஆண்டு மே மாதம் வரை  மனோன்மணியம் பல்கலைகழக ஆட்சிமன்ற பேரவை உறுப்பினர்களாக பதவி வகிப்பார்கள்.

 

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.