கோவையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் கைது: திமுகவினர் திரண்டதால் பரபரப்பு

கோவையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் கைது - உக்கடம் போலீஸ் நிலையம் முன் திமுக எம்.எல்.ஏ.,நா.கார்த்திக் உள்பட திமுகவினர் பலர் திரண்டதால் பரபரப்பு.


கோவையில் மதம்மாறி காதல் திருமணம் செய்தஜோடியை மிரட்டி தாக்கியதாக கோவை திமுகவை இளைஞர் அணி அமைப்பாளர்   கோட்டை அப்பாசை உக்கடம் போலிசார் கைதுசெய்துள்ளனர். 


கோவை கோட்டை மேட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர், கோவை வடவள்ளியை சேர்ந்த தன்னுடன் படித்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் இருவரும் யாருக்கும் தெரியாமல் தனது நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. மேலும் தங்களுடைய உறவுகாரபெண் காணமல் போனது பற்றி விசாரித்துக்கொண்டு இருந்த கோட்டை அப்பாஸ், சந்தேகத்தின் பேரில் இளைஞரின் வீட்டின் அருகில் நின்றுகொண்டு இருந்த இருவரிடம் விசாரித்ததில், காணாமல் போன உறவுக்காரபெண். மதம்மாறி திருமணம் செய்தது தெரியவந்ததை அடுத்து. இவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதனைத்தொடர்ந்து. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை உக்கடம் போலிசார் கோட்டை அப்பாஸை கைது செய்துள்ளனர்.


 தகவல் அறிந்து சிங்காநல்லூர் திமுக  சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் காவல் நிலையத்திற்க்கு வந்து விசாரித்து சென்றார். இதனையடுத்து திமுகவை சேர்ந்தவர்கள் உக்கடம் காவல் நிலையம் முன்பு திமுகவினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Previous Post Next Post