உள்ளாட்சித்  தேர்தல் முன்விரோதம்; இருவேறு சமூகத்தினரிடையே மோதல்...

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 ம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 50 நாட்கள் கடந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

 


 

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தேர்தல் முன்விரோத காரணமாக 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தர்மநல்லூர் கிராமத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு வேறு சமூகத்தினருக்கு  இடையே பயங்கர மோதல் கழி கட்டை கல் போன்ற ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.

 


 

இதில்  10 க்கும் மேற்பட்டோர் காயம் இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான கம்மாபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து இருதரப்பிலும் 12 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 


 

காயமடைந்தவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது