பவானிசாகர் சட்டமன்ற தொகுதில் விலையில்லா வீட்டுமனை பட்டா, மகளிர் கூட்டமைப்பினருக்கு டிராக்டர் உட்பட நலத்திட்ட உதவிகள்


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, மகளிர் கூட்டமைப்பினருக்கு டிராக்டர் ,உழைக்கும் மகளிர்க்குமானிய விலையில் இருசக்கர வாகனம், போன்றவற்றை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் ,தமிழக  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன், பவானிசாகர்  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் ஜெயராமன்,வடக்கு ஒன்றிய செயலாளர்
சி.மாரப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ் , பவானிசாகர்  ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கொமரபாளையம் சரவணன்,சதுமுகை சிவராஜ்,மாக்கினாங் கோம்பை அம்முஈஸ்வரன் , அம்மு பூபதி, அரியப்பம்பாளையம்  அம்மா பேரவை செயலாளர் மிலிட்டரி சரவணன் மற்றும் பல கழக நிர்வாகிகள் . 


Previous Post Next Post