பழனியில் பெரியார் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


பழனியில் பெரியார் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை முன்னிறுத்தி இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கில் EIA என்ற சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

 

இந்த சட்டத்தினால் இயற்கை வளம் முழுமையாக சுரண்டப்படும் இயற்கை வளத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

 

எனவே மத்திய அரசு இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்ட சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு தலைமையில் அனைத்து கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்புலிகள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஆதித்தமிழர் கட்சி, தமிழர் விடியல் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மற்றும் பெரியார் உணர்வாளர்கள் மனிதநேய மாண்பாளர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு கையில் மத்திய அரசுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துக் கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.