பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்... நெல்லை மாவட்ட கலெக்ட்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தகவல்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் சிறப்பு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது

இவ்விருதினை பெறுவோருக்கு ரூபாய் ஒரு லட்சம் விருது தொகையும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது எனவே சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகள் அடங்கிய விபரங்களுடன் விண்ணப்பதாரரின் பெயர் சுய விவரம் மற்றும் முழு முகவரியுடன் 31 10 2020 க்குள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது