திருச்சியில் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மமக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மமக கட்சியினர் ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம் ராமகிருஷ்ணா பாலம் அருகே மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நடைபெற்றது.


இதில் மாவட்ட தலைவர் உதுமான் அலி, தலைமை தாங்கினார் தமுமுக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி ,மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், ஆகியோர் முன்னிலை வகித்தனர் மமக மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயினுலாபுதீன், சிறப்புரையாற்றினர்.


இதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்கள் மற்றும் 7 தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி பேசினார். இந்த கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் முகமது ராஜா நன்றி உரை கூறினார்.