விருத்தாசலம் பெரியார் நகர் தெற்கில் தார்சாலை அமைக்கும் பணி

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் தெற்கில் அமைந்துள்ள நியாய விலைகடைக்கு செல்லும் வழியில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் தண்ணீரை கடந்து செல்லவேண்டிய நிலை இருந்துவந்தது. 

 

அதனை பார்த்த மனிதஉரிமை கழக மாவட்ட தலைவர் வினோத் நகராட்சி ஆணையாளர் பாண்டு பொறுப்பு அவர்களிடம் கோரிக்கை வைத்தார்

 

அதன் பேரில் உடனடியாக தார்சாலை போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு  ஜல்லியும் கொட்டப்பட்டுள்ளது. இதனால் கடைக்கு வரும்  அப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

அதற்கு மனிதஉரிமை கழக மாவட்ட தலைவர் வினோத் நகராட்சி ஆணையாளர் பாண்டு பொறுப்பு அவர்ககளுக்கு தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.