ஜாவத் புயல் 13 முக்கிய ரயில்கள் நாளை ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு !!


வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் ஜாவத் புயல் உருவாவதால் 13 முக்கிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் ஜாவத் புயல் உருவாவதால் 13 முக்கிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியை வரும் 4ம் தேதி நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயலுக்கு, ஜாவத் என்ற பெயரிடப்பட்டுள்ளது. 

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல், அதனை ஒட்டிய தென் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஜாவத் புயல் எதிரொலியாக நாளை 13 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

புவனேஸ்வரம் - ராமேஸ்வரம் வாராந்திர அதிவேக ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

புருலியா - விழுப்புரம் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில்(22605) சேவையும் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹவுரா  - சென்னை சென்ட்ரல் கொரமண்டல் அதிவேக விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

ஹவுரா  - மைசூரு வாராந்திர அதிவேக விரைவு ரயில் புயல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

சந்திரகாசி  - சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

ஹவுரா  - யஷ்வந்த்பூர் அதிவேக விரைவு ரயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஹவுரா  - சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் சேவை புயல் காரணமாக நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்சார் - திருவனந்தபுரம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பாட்னா - எர்ணாகுளம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் (22644) சேவை புயல் காரணமாக நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை சென்ட்ரல்  - ஹவுரா கொரமண்டல் அதிவேக விரைவு ரயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் சென்னை சென்ட்ரல்  - புவனேசுவரம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சென்னை சென்ட்ரல்  - ஹவுரா வாராந்திர அதிவேக விரைவு ரயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி - ஹவுரா வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில் சேவையும் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post