பொங்கல் தொடர் விடுமுறை என்பதால் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

 

பொங்கல் தொடர் விடுமுறை என்பதால்கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஈரோடு:

கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.இந்த நிலையில் பொங்கல் தொடர்விடுமுறை என்பதால்

பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.


இந்த நிலையில் பொங்கல், மாட்டுப்பொங்கல். உழவர் திருநாள் நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் குளித்து குதூகளித்து செல்கிறார்கள், பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது.

மேலும் இளைஞர்கள் பலர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்து பரிசல் பயணம் செய்தனர் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்ப ட்டது.


குடும்பத்துடன் கொடி வேரி வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செயய்ப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு செல்கின்றனர். பொதுப்பணித்துறையும், காவல்துறையும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கவனமாக இருக்கும்படி விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகின்றனர்.

Previous Post Next Post