ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, உள்ள கடம்பூர் மலை கிராமத் தில், கூத்தம்பாளயம் ஊராட்சி, மாக் கம்பாளையம்கோவிலூரில்,சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலில், பரம்பரை பரம்பரையாக மலைவாழ் மக்களான பத்திரையா குடும்பம், உக்கனார் குடும்பம், எஜமா னர் குடும்பம் ஆகிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தர்ம கர்த்தாவாக இரு ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடம்பூர் கிராமத்தில் உள்ள திமுகவைச் சேர்ந்த பி. சண்மு கம் என்பவரின் தூண்டுதல் பேரில், அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவி லுக்கு புதிதாக அறங்காவலர் நியமித் துள்ளனர். இதனால் இரு தரப்பினரு க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக சண்முகம் என்பவர் கடம்பூர் காவல் நிலையத்தில், மலை வாழ் மக்களான 22 பேரின் மீது பொய் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப் படையில் காவல்துறையினர் எந்த வித விசாரணையும் இன்றி,22 பேரின் மீது, ஜாமினில் கூட வெளிவர இய லாத,சட்டப் பிரிவுகளில்,கடம்பூர் காவ ல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
மேலும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண் பதற்காக, கோபி வருவாய் கோட்டாச் சியர் தலைமையில். இருதரப்பினர் பங்கேற்ற, அமைதி பேச்சுவார்த்தை யை, ரத்து செய்தது சம்பந்தமாக, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ. பண்ணாரி சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் எம்.எஸ். சரவணனை சந்திக்க சென்றபோது, சட்டமன்ற உறுப்பினரை, டிஎஸ்பி சரவணன் அவமதித்ததாக கூறி, மேற்கு மண்டல காவல் துறை டிஜஜி யிடம் சட்டமன்ற உறுப்பினர் அ.பண் ணாரி புகார் அளித்தும், மலை வாழ் மக்கள் மீது, பொய் வழக்கு பதிந்த, கடம்பூர் காவல்துறையினர் மற்றும் திமுகவினரை கண்டித்து, கடம்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்த, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ. பண்ணாரி காவல் துறையினரிடம் அனுமதி கேட்டும், காவல்துறையினர் அனுமதி வழங் காததால்,அதிமுக தலைமை கழகம் சார்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுக எதிர்க் கட்சியாக இருந்த பொழுது, திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வில்லையா? என கேள்வி எழுப்பி, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடந்த அனுமதி அளிக்குமாறு, காவல் துறை யினருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலா ளருமான எடப்பாடி கே. பழனிசாமி, பொய் வழக்கு போட்ட காவல் துறை யினர் மற்றும் திமுகவினரை கண்டி த்து வியாழனன்று, கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டதையடுத்து, கடம்பூர் சின் ன சாலட்டியில், முன்னாள் அமைச்ச ரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட் டையன் தலைமையில், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ. பண்ணாரி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.இதில், கடம்பூர் மலை க்கிராமங்களைச் சார்ந்த,2000 க்கும் அதிகமான,மக்கள் பங்கேற்ற னர்.
இதில் கலந்து கொண்ட பின் செய்தி யாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தர்மத்தின் அடிப்படையில் சொல்லு கிறேன் தர்மத்தை காப்பவர்கள் யாரு ம், சுயநலத்தோடு செயல்படுபவர்கள் ஆனால், தர்மம் சாய்க்கப்படும் போது அதன் துன்பத்தை, அவர்கள் குடும்பம் அனுபவிக்கும் என்றும், இவ்வாறுதுன் பப்படும், பல குடும்பங்களை,கண்கூட நான் பார்த்து கொண்டு இருக்கிறேன் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்த பொய் வழக்கை,காவல்துறை திரும்ப பெற வில்லை என்றால், அதிமுக சார்பில், தொடர் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில். முன்னாள் எம்.பி. சத்திய பாமா, அதிமுக ஒன்றிய செயலாளர் கள் சி.என்.மாரப்பன், என்.என். சிவ ராஜ்.வி.ஏ.பழனிசாமி.டி.எஸ்.பழனிசாமி ஹாசனுர் சும்பிரமணியம்,துணைச் செயலாளர் தாளவாடி சிக்கன் பாபு,முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி க்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,மாவட்ட கவுன்சிலர்பிரபாகரன்.ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரா சரவணன், ஆன ந்திஆலமலை,மகேஷ்மாதேஸ்,எஸ்.எம்.சரவணன், ஆர்.சும்பிரமணியன், சதீஸா, மாதேஷா , மாவட்ட, ஒன்றிய, நகர்மன்ற,ஊராட்சிமன்ற உறுப்பினர் கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகி கள், சார்பு அணி நிர்வாகிகள், பொது மக் கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கே ற்றனர். நிறைவாக, கடம்பூர் சத்திய மங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் என்.எம்.எஸ். நாச்சிமுத்து நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் காவல்துறையை கண்டித்து, கண்டன முழக்கம் எழுப் பினர்.