ஈரோடு மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

 

ஈரோடு மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.ஜி.ஜவஹர் ஐபிஎஸ் அவர்கள் பத்திரிக்கை செய்தி குறிப்பில் மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள 09 (ஆண் 06, பெண் 03) பணியிடங்களை நிரப்ப 20 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்கு உட்பட்ட 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நல்ல உடற்தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து 02.02.2024 மற்றும் 03.02.2024 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட ஊர்காவல் படை அலுவலகம், பன்னீர் செல்வம் பார்க், ஈரோடு என்ற முகவரியில் காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்

Previous Post Next Post