தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை.!

 

டேக்வாண்டோ போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான 38கிகி மேற்பட்ட எடைப்பிரிவில்  துர்கா ஸ்ரீதேவி தங்கப்பதக்கமும், 29கிகி எடைபிரிவில் ஷிவானி தங்கப்பதக்கமும், 26கிகி எடைபிரிவில் மகிஷா பிரியங்கா தங்கப்பதக்கமும், 17வயது மாணவிகளுக்கான 55கிகி  எடைபிரிவில் ஷாரணி தங்கப்பதக்கமும்,

19வயது மாணவர்களுக்கான 63 கிகி உட்பட்ட எடைபிரிவில் அஸ்வின் தங்கப்பதக்கமும், 17வயது  மாணவர்களுக்கான 51கிகி எடைபிரிவில் நரேஷ் தங்கப்பதக்கமும், 48கிகி எடைபிரிவில் பாலமுருகன் தங்கப்பதக்கமும், 38கிகி எடைபிரிவில் நிவாஷ் சுஜித் தங்கப்பதக்கமும்,

ஜூடோ போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான 55கிகி எடை பிரிவில் கேதீஸ்வரன் தங்கப்பதக்கமும், 17வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான 55கிகி எடை பிரிவில் சதீஷ் தங்கப்பதக்கமும், வெற்றி பெற்று மாநில அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்கள்.

வெற்றிபெற்ற மாணவ மாணவிகளையும் டேக்வாண்டோ மற்றும் ஜூடோ பயிற்சியாளர் ராமலிங்க பாரதியையும் பள்ளியின் தாளாளர் அருணாச்சலம், பள்ளி முதல்வர் மீனா குமாரி, துணை முதல்வர் சுப்புலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post