தென்னிந்திய கராத்தே போட்டியில் 13 தங்கம் உள்பட 78 பதக்கங்கள் வென்ற திருப்பூர் மாணவர்கள்

தென்னிந்திய அளவில் நடந்த கராத்தே போட்டி ஈரோட்டில் நடந்தது. ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் சேம்பியன் பட்டத்தை வென்றனர்.

ஈரோட்டில் நடந்த தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஐந்து வயது முதல் 15 வயது வரை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து வி- கராத்தே அகாடமி மாணவர்கள் சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியாளர் விஸ்வநாத் தலைமையில் பங்கேற்றனர். கத்தா மற்றும் குமித்தே பிரிவில் 13 தங்கம், 26 வெள்ளி, 39 வெண்கல பதக்கங்களை வென்றனர். இதில் அபினவ் கிறுத்திக், பாரத், தேவா, மித்ரா, கோகுல் ஶ்ரீராம், ஶ்ரீநாத், பேரரசன், அஜய் ராகவன், லிதேஷ், பிரதீப், சபரி, நரேன் மற்றும் சஷ்மிதா ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஓபன் குமித்தே பிரிவில் பாரத், பிரனேஷ், சஷ்ணிதா ஆகியோர் சிறப்பு பரிசாக சைக்கிள் பெற்றனர். ஓபன் குமித்தே பிரிவில் மூன்று மிதிவண்டிகளை சிறப்பு பரிசாகவும் வென்றனர். தொடர்ந்து கராத்தே சேம்பியன் சிப் பட்டத்தையும் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
Previous Post Next Post