அமெரிக்கா : மீண்டும் துப்பாக்கிச் சூடு ஏழு பேர் படுகொலை - சந்தேக நபர் கைது.!

 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு பிரபலமான நடன அரங்கில் 11 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, மீண்டும்  துப்பாக்கி ஏந்திய ஒருவர் சுட்டதில்  முஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான ஹாஃப் மூன் பேவில் இரண்டு தனித்தனி இடங்களில் நிகழ்ந்தன.

தாக்குதல் நடத்தியவர் உள்ளூர்வாசியான 67 வயதான ஜாவோ சுன்லி என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கான காரணத்தை இதுவரை போலீசார் தெரிவிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட எட்டாவது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post