ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. உற்சாக நடனம் ஆடிய இன்ஸ்பெக்டர்... இது போலீஸ் பொங்கல்

 ரஞ்சிதமே... ரஞ்சிதமே... மனச கலைக்கும் மந்திரமே... 

நொடியில் கலர்புல் ஆனது காவல் நிலையம்!!🎊🎊🎊🎉

வேட்டி, சட்டை - சேலையில் வந்த போலீசார்...

பொங்கல் வைத்து குலவையிட்டு கோலாகலம்

பொங்கல் பண்டிகை உற்சாகத்தில் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே... பாடலுக்கு ஆடி அசத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரால் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் மகிழ்ச்சி வெள்ளம் அலைமோதியது.

தை திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை மற்றும் சேலையில் காவல் நிலையத்திற்கு முன்னர் வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவை முழக்கமிட்டும்,பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டும் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரஞ்சிதமே... ரஞ்சிதமே.. மனச களைக்கும் மந்திரமே... பாடல் வரிகளுக்கு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் உற்சாக நடனம் ஆடியது அனைவரையும் கவர்வதாக இருந்தது. இந்த தெற்கு காவல் நிலையம் தமிழகத்தில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post