பவானி ஆற்றில் பரிசலில் வந்த பண்ணாரி அம்மன்... பொதுமக்கள் திரண்டு சாமிதரிசனம்

 ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன், சருகுமாரியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்த திருவீதி உலா நடைபெற்றது. 

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த, பண்ணாரியில்  பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திரு விழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.

குண்டம் திருவிழாவை யொட்டி,சப்பரத்தில் எழுந்தருளியு ள்ள ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன். சருகு மாரியம்மன் சப்பரம், கடந்த 21ம் தேதி முதல் சிக்கரசம்பாளையம், புதூர், அக்கரை நெகமம் புதூர்,வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம் வழியாக இக்கரை தத்தப் பள்ளிகிராமத்தை வந்தடைந்தது. 

4வது நாளான இன்று.இக்கரைத்தத்தப்பள்ளியில் இருந்து, பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து. அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தை வந்தடைந்தது. இரவு இக்கிராமத்தில் தங்கி இருக்கும்.  5வது நாளான நாளை இக்கிராமத்தில் திருவீதி உலா முடிந்து, நாளை இரவு சத்தியமங்கலம் வந்தடைய உள்ளது.

பரிசலில் வந்த பண்ணாரி அம்மன், சருகுமாரி அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Previous Post Next Post