கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளகோவிலை சேர்ந்த முதியவர் பலி... தூத்துக்குடியிலும் ஒருவர் இறப்பு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளக்கோவிலை சேர்ந்து முதியவர் பலி. அவரது மனைவி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று,  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கட்டுக்குள் வந்தது.  இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

 இந்தியா மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டதில் இது வரை 18பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளக்கோவில் கே.பி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த  82 வயதான நபர் கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் இருந்தார். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இதையடுத்து 78 வயதான இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டது.  இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மேலும் சுகாதாரதுறையினர் தரப்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரம் பேணி வருகின்றனர்.

இதே போல கடந்த மாதம் 23-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 54 வயதான நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 

Previous Post Next Post