தூத்துக்குடியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு.!

 

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். நேற்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மாதம் 23-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பார்த்திபன் (54) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பார்த்திபனுக்கு கொரோனா பாதிப்புடன் இணை நோய் பாதிப்பு இருந்ததாகவும் மருத்துவமணை தரப்பில் கூறப்படுகிறது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post