கோவை கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் சார்பாக முப்பெரும் விழா

கோவை கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா  ஜமாத் சார்பாக,கல்வி விழிப்புணர்வு,மருத்துவ சேவை துவக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம் என முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..

கோவையில் கடந்த 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவை கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா  ஜமாத் செயல்பட்டு வருகிறது.
இதில் பழமை வாய்ந்த பெரிய பள்ளிவாசல்,மனப உல் உலூம் பள்ளி என கோவை நகரின் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த இடங்களில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில்
கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா  ஜமாத் சார்பாக 
கல்வி விழிப்புணர்வு,மருத்துவ சேவை துவக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம் என முப்பெரும் விழா,பள்ளி வளாகத்தில் உள்ள ஹாஜியார் வலியாப்பா நினைவு அரங்கில் நடைபெற்றது.. 
ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா  ஜமாத் தலைவர்  இனாயத்துல்லா தலைமையில் நடைபெற்ற விழாவில்,முன்னதாக கல்வி கற்பதன் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மகளிர் அணி தேசிய தலைவி பாத்திமா முசபர்,கல்வியாளர் முனைவர் ஜாஸ்மீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தொடர்ந்து மருத்துவ சேவை மையத்தை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் நிர்மலா துவக்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழாவில்,சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,தூய மைக்கேல் பேராலயம் தலைவர் அருட்தந்தை தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இளம் தலைமுறை மாணவர்களுக்கு  மத நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து பேசினர்.
விழாவில் கௌரவ அழைப்பாளராக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர்  அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா  ஜமாத் நிர்வாகிகள்,மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்..
Previous Post Next Post