கோவை இந்துஸ்தான் கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை துறை சார்பாக மாணவர்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விதமாக எக்ஸாம்ளர் எனும் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றதுகோவை இந்துஸ்தான் கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை துறை சார்பாக  மாணவர்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விதமாக எக்ஸாம்ளர் எனும் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.


வணிக மேலாண்மைத் துறை படிக்கும் மாணவர்களுக்கு வணிகத்தின் பல்வேறு கூறுகளான கணக்குப்பதிவு, நிதிமேலாண்மை, சந்தைப்படுத்துதல், மனிதவளம், இயங்கு மேலாண்மை போன்றவற்றிற்கு அறிமுகப்படுத்துகின்றன.இந்நிலையில் வணிக மேலாண்மைத் துறையில் மாணவர்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விதமாகவும் வெளிப்படுத்தும் விதமாகவும் கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை துறை சார்பாக Exemplar-2024 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 
இதில் முதுகலை வணிக மேலாண்மை துறை இயக்குநர் டாக்டர்.பா.சுதாகர் தலைமையில் சிறப்பு விருந்தினராக ரத்தினம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலரான மூகாம்பிகா இரத்தினம்  கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாற்றினார். 
இவ்விழாவின் சிறப்புரை கல்லூரி முதல்வர்  அ.பொன்னுசாமி  வழங்கினார்.மேலும் இவ்விழாவின் சிறப்பு அம்சத்தை செயலாளர் ஸ்ரீமதி டி.ஆர்.கே சரஸ்வதி  மற்றும் நிர்வாக செயலாளர் டாக்டர் கே.பிரியா  ஆகியோர் வழங்கினார்கள்.இக்கருத்தரங்கின் ஏற்பாடுகளை சரவணன் மற்றும் வால்டர் விகாஸ்  மேற்பார்வையில் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஒன்றிணைந்து நடத்தினார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர்.
Previous Post Next Post