தங்களது திறமைகளை வெளிப்படுத்திய கோவை டிரினிட்டி பள்ளி மாணவர்கள் விருதுகளை வழங்கி ஊக்குவித்த பள்ளி

தங்களது திறமைகளை வெளிப்படுத்திய கோவை டிரினிட்டி பள்ளி மாணவர்கள் விருதுகளை வழங்கி ஊக்குவித்த பள்ளி...

கோவை ராமநாதபுரம் பகுதியில் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக மாணவர்களின் அறிவு மற்றும் திறன் போட்டிகள் நடைபெற்று வருகிறது.சமீபத்தில்  பள்ளியில் மழலையர் பள்ளி மாணவர்கள் முதல் மேல்நிலை பள்ளி மாணவர்கள் வரை கலந்து கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஹிந்தி ரோபோடிக்ஸ், ஆர்ட் & கிராப்ட் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவர்கள் தங்களது ஆற்றலை வெளிப்படுத்தினர்.
இதனிடையே பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கும் விழா டிரினிட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில் நேரு கல்வி குழுமங்களின் செயல் அதிகாரி டாக்டர் கிருஷ்ணகுமார் ,பள்ளி தாளாளர் ஜோசப் புத்தூர், செயலாளர் டாக்டர் குரியாச்சன் 
முதல்வர் டாக்டர்  தனலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.தொடர்ந்து மேடையில் மாணவர்களின் நடனம்,கராத்தே உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post