கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 6 தர வரிசை மாணவர்கள் உட்பட 254 பேர் பட்டம் பெற்றனர்…

கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியின்  ,11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல் தகவல் மேலாண்மை நிறுவனத்தின் 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு  விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கே.ஜி.ஐ.எஸ்.எல்.குழுமங்களின் நிர்வாக இயக்குனர் முனைவர் அசோக் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினராக,அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர்  பி சக்திவேல் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர்,மாணவ,மாணவிகள் கல்வி கற்பதோடு ஒழுக்கத்தை பேணி காப்பது அவசியம் என்றார்.தொடர்ந்து பேசிய அசோக் பக்வத்சலம் நவீன தொழில் நுட்பங்களை ஆர்வத்துடன்  கற்று  கொள்ள வேண்டியது அவசியம் எனவும்,அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.விழாவில் 6 பல்கலைக்கழக தரவரிசை வைத்திருப்பவர்கள் உட்பட மொத்தம் 254 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது..நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post