கோவையில் அரசு பள்ளி ஆசிரியைகள் ஒருங்கிணைத்த அரசு பள்ளி ஆண்டு விழாவில் வண்ண உடைகளுடன் நடுநிலை பள்ளி மழலை குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
தனியார் பள்ளிகளில் பொதுவாக பல இலட்சம் செலவு செய்து மேடை அமைத்தும்,மாணவ,மாணவிகளுக்கு உடைகளுக்கே பல ஆயிரங்களையும் செலவிட்டு ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..இது போன்ற விழாக்கள் அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு கனவாகவே இருக்கும்.. இந்நிலையில்,கோவை பேரூர் பகுதியில் உள்ள கிராம ஒன்றிய அரசு பள்ளி ஆசிரயைகள் ஒன்றிணைந்து அரசு பள்ளி மழலை குழந்தைகளின் கனவை நனவாக்கியுள்ளனர்.அதன்படி அவர்களது சொந்த ஏற்பாட்டில் செய்திருந்த ஆண்டு விழாவில்,மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்து நடத்திய இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும் போத்தனூர் டிஸ்கவுண்ட் ஸ்டோர் உரிமையாளருமான ஹாரீஷ் கலந்து கொண்டார்..நிகழ்ச்சியில் குழந்தைகள் ,மாணவ மாணவிகள் வண்ண உடைகள் அணிந்து பாட்டுக்கு ஏற்றார் போல் மேடையில் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது…குறிப்பாக தமிழ் பாரம்பரிய கலைகளை தத்ரூபமாக மேடையில் ஆடினர்.. தொடர்ந்து குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு விருந்தினர் முகம்மது ஹாரீஷ் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்..