வெள்ளகோவில் சாமிநாதன் ராஜினாமா

தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். சில நாள்களுக்கு முன்பு சாமிநாதன் தனது ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைவரிடம் கொடுத்திருக்கிறார். ஜூன் 1-ம் தேதியிலிருந்து மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவி தர இருப்பதாகப் பரவலாகப் பேச்சு எழுந்தது. அவருக்கு வழிவிட்டு, சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதையடுத்து, சொந்த ஊரிலிருந்து சென்னை கிளம்பி வந்த சாமிநாதன், கட்சித் தலைமையிடம் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். இதை இன்னும் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், உதயநிதி புதிய பதவியில் ஒரு மாதத்துக்குப் பிறகு அமர வேண்டும் என்று ஆன்மிகப் பிரமுகர்கள் யோசனை சொன்னதாக தி.மு.க பிரமுகர்கள் சொல்கிறார்கள்.