இரட்டை வேடம் போடும் திமுக அரசு! முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் பேட்டி

ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மாணவரணியின் சார்பாக ,  திருப்பூர் குமரன் சிலை அருகில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் தங்களது இன்னுயிரை மாய்த்துக் மாய்த்துக்கொண்ட கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்றது. 

நிகழ்வில் முன்னாள் அமைச்சர், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன், மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி  சிறப்புரையாற்றினார்.
முன்னாள் அமைச்சர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்,உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும்,திருப்பூர் ஒன்றிய கழகச் செயலாளருமான கே.என்.விஜயகுமார் ,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான சு.குணசேகரன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார். திருப்பூர் மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சதிஷ் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டு 22 மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
அப்போது திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: 
கடந்த 2021 ஆம் தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து மேற்கொள்ளப்படும் என்று சொன்னார்கள், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பின்பும் எவ்வாறு ரத்து செய்தீரகள் என்று கேட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் அது ரகசியம் வெற்றி பெற்ற பிறகு நாங்கள் ரத்து செய்வோம் என்று கூறினார், ஆனால் கடந்த நான்கு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை, 22 மாணவர்கள் உயிர் நீத்ததற்கு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி தான் காரணம் என்றும், அன்று எதிர் கட்சியாக இருந்த பொழுது அனிதா மறைவிற்கு 20 லட்சம் கொடுத்த திமுக இன்று ஆளுங்கட்சியான பிறகு 22 மாணவர்கள் உயிர் நீத்துள்ளனர் அதற்கு எதுவும் செய்யவில்லை, இதுதான் திமுகவின் இரட்டை வேஷம், படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில். என்று கூறினார். 
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக மாணவரனி செயலாளர் பரணி குமார் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக மாணவர் அணி செயலாளர்  தேவராஜ் நன்றி உரையாற்றினர்.
 இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம்,தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும்,மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி, திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும்,மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான  கண்ணப்பன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்  பட்டுலிங்கம், மாவட்ட கழக இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கழக துணைச் செயலாளர்  லட்சுமி, கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன்,காந்திநகர் பகுதி கழக செயலாளர் கருணாகரன், கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் பி.கே.முத்து, முருங்கபாளையம் பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரி ஹரசுதன்,வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் சுப்பிரமணியம், தொட்டி பாளையம் பகுதி கழக செயலாளர் வேலுமணி, அங்கேரிபாளையம் பகுதி கழக செயலாளர்  பாலசுப்பிரமணியம்,சிறுபூலுவபட்டி பகுதி கழக செயலாளர்  தங்கராஜ், நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர்  நாச்சிமுத்து,புதிய பஸ்நிலையம் பகுதி கழக செயலாளர் கனகராஜ், கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர்  சிவாளா தினேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர்  சுந்தராம்பாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் திரு.கண்ணபிரான்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.முருகேஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள்  கோபால்சாமி,  மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர்  வேல்குமார் சாமிநாதன்,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கண்ணுச்சாமி,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். சீனியம்மாள்,மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் மார்க்கெட் .சக்திவேல்,மாவட்ட கலைப் பிரிவு செயலாளர்  ரத்தினகுமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கார்த்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார் , திருப்பூர் மாநகர் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள்  மாரிமுத்து,  ரத்தினசபாபதி,  ஹரிபிரசாத்,  பரத், ஜெகன், சூர்யா, மோகன்ராஜ், ரகுபதி, தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். 
Previous Post Next Post