சுக்ரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம்: எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது

திருப்பூர் அருகில் உள்ள 2800 ஆண்டுகள் பழமை வாந்த சுக்ரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது. அர்ச்சகர்கள் மார்பளவு தண்ணீரில் அமர்ந்து வேத மந்திரங்கள் முழங்கினர்.
திருப்பூர் அடுத்த சர்க்கார் பெரியபாளையத்தில் 2800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில், பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த யாகபூஜையில்,  கோவில் தலைமை அர்ச்சகர் கணேசமூர்த்தி, கரூர் ஆதீனம் குமார் சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில்  ஆறு சிவாச்சாரியார்கள் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ல் அமர்ந்து மழை வேண்டி வேத மந்திரங்கள் முழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற யாகத்தில், 501 வகையான மூலிகைகள் இட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தொடந்து சுக்ரீஸ்வரர், ஆவுடைநாயகி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கணேஷ், ராஜேந்திரன், சடையப்பன், ரத்தினமூர்த்தி,  செல்வராஜ், சுப்பிரமணிய குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   


Previous Post Next Post