திருப்பூர் பல்லடம் ரோட்டில் புதிய கன்னிமாரா பேமிலி ரெஸ்டாரண்ட் ; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

திருப்பூர் பல்லடம் ரோட்டில் புதிய கன்னிமாரா பேமிலி ரெஸ்டாரண்டை 

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ராக்கியபாளையம் பிரிவில் கடந்த 17 ஆண்டுங்களாக வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்றவகையில் நாவிற்கு இனிய சிறந்த முறையில் செயல்பட்டு வரும் கன்னிமாரா பேமலி ரெஸ்டாரெண்டின் மேலும் ஒரு புதிய கன்னிமாரா சைனீஸ் தந்தூரி பேமலி ரெஸ்டாரெண்ட் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பல்லடம் ரோட்டில்,உள்ள ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபம் எதிரில் நடந்தது. விழாவிற்கு வந்திருந்தவர்களை ரெஸ்ட்டாரெண்ட் உரிமையாளர் வி.சேகர் மற்றும் குடும்பத்தினர்கள் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சித்துத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் தலைமை தாங்கி புதிய ரெஸ் டாரெண்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இந்த ரெஸ்டாரெண்டில் இந்தியன் சைனீஸ் தந்தூரி சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன், இறால், மீன் வகைகள், நண்டு, மட்டன், சிக்கன், நாட்டுக்கோழி பிரியாணி, மீன், இறால் பிரியாணி ஆகியவைகளும், ஆர்டர் செய்தால் வீடடிற்கே டேர் டெலவரி செய்யப்படும், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஹால் வசதியும் உள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையாகும் என உரிமையாளர் வி.சேகர் தெரிவித்தார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன், கே.என்.விஜயகுமார், வடக்கு தொகுதி பொறுப்பாளர் ஜெ.ஆர்.ஜான் செயலாளர் வி.ராதாகிருஷ்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகரா ட்சி ஆணையாளர் சிவக்குமார், மாநகராட்சி முதன்மை பொறியாளர் ரவி, மாநகர நகர் நல அலுவலர் டாக்டர். பூபதி,  தொழில் அதிபர்கள் திருப்பூர் கபடி கழகத்தலைவர் ஜெயச்சித்ரா சண்முகம், சென்னியப்பா யார்ன்ஸ் சுப்பிரமணியம், லட்சுமி ஜுவல்லரி ராமசாமி, உதவி ஆணையாளர்கள் சபியுல்லா ( 3வது மண்டலம்), கண்ணன் (,4வது மண்டலம்), உதவி செயற்பொறியாளர்கள்  கௌரி சுந்தரம், திருநாவுக்கரசு, சுகாதார  ஆய்வாளர் ராஜேந்திரன், மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகள்  வி.எம்.சண்முகம், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், அர்பன் வங்கி தலைவர் பி.கே.எஸ்.சடையப்பன், கருவம்பாளையம் மணி, ஹரிஹரசுதன், மற்றும்  மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  முடிவில் 3வது மண்டல முன்னாள் தலைவர் நல்லூர் டெக்ஸ்வெல் முத்து நன்றி கூறினார்.
 


Previous Post Next Post