நாலரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் கைது

 


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கலம் கிராமத்தில் தனது வீட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்த நான்கரை வயது சிறுமியிடம் அதே ஊரை சேர்ந்த, வெங்கலம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்த தகவலின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள அரும்பாவூர் போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிறுவனை கைது செய்து,இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.