திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மனைவி பரபரப்பு புகார்கணவர் கொலை மிரட்டல் விடுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி திருப்பூர் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு.

 

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிமொழி. இவருக்கு திருமணமாகி மனைவி இறந்த நிலையில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலம், மாண்டியாவை சேர்ந்த திருமணமாகி கணவரை பிரிந்து தனது மகளுடன் வாழ்த்து வந்த ராணி என்ற பெண்ணை இன்ஸ்பெக்டர் மணிமொழி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ராணி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் 'திருமணத்துக்கு

பிறகு மணிமொழிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக  அறிந்த ராணி, மணிமொழியுடன் இதுகுறித்து கேட்டதாகவும்,  இதன் காரணமாக இன்ஸ்பெக்டர் மணிமொழி ராணியையும், அவரது மகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறினார். இதனையடுத்து திருப்பூர் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் மணிமொழியிடம் கேட்ட பொழுது, தான் அந்த பெண்ணை திருமணம் செய்து உண்மை எனவும், அப்பெண்ணுக்கு வேறு ஆணுடன் தொடர்பு உள்ளதாகவும், தனக்கு சொந்தமான 55 பவுன் நகையை திருடி விட்டு சென்றுவிட்ட தாகவும், இதுதொடர்பாக தனது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மாலை போலீஸ் நிலையம் வந்த ராணி அங்கு வந்த போலீஸ்காரர் கார் மீது மண் அள்ளி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.