திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு

திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு

ஸ்காட்லாந்து கே.சிவக்குமார், ஆணையர் சிவக்குமார் பங்கேற்பு

 


 

 

திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு சமுத்ரா கிராண்ட் மகாலில் நடந்தது. திருப்பூர் மாநகர கமிஷனர் கே.சிவக்குமார் தலைமை தாங்கினார். மழை நீர் சேகரிப்பு மையத்தை சேர்ந்த ஸ்காட்லாந்து கே.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மழைநீர் சேகரிப்பு, அதன் பயன்கள், மழை நீர் சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நவீன வழிமுறைகள் குறித்து பேசினார். இந்த கருத்தரங்கில் திருப்பூர் சார்ந்த தொழில் அமைப்பினர், சமூக அமைப்பினர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் டீ தலைவர் ராஜா சண்முகம், ஏ. இ. பி.சி., சக்திவேல், கிளாசிக் சிவராமன், குமார் துரைசாமி, டையிங் சங்க முருகாசமி, மாநகராட்சி உதவி கமிஷனர்கள் சபியுல்லா, வாசுக்குமார்,  செல்வநாயகம், கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் ரவி, ஆறுமுகம், சிக்கண்ணா கல்லூரி மோகன் குமார், எம்பரார் பொன்னுசாமி, உஷா ரவிக்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.