ஸ்டெர்லைட் திறக்கப்படுவதால் சமூகத்தின் வளர்ச்சி மேம்படும் என்று கூறுவது அபத்தமானது -  உயர்நீதிமன்றத்தில் சி.பி.எம்.தரப்பு வழக்கறிஞர் வாதம்


 

ஸ்டெர்லைட் திறக்கப்படுவதால் சமூகத்தின் வளர்ச்சி மேம்படும் என்று கூறுவது அபத்தமானது- ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் சி.பி.எம்.தரப்பு வழக்கறிஞர் வாதம்

 

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக் கப்பட்டது, வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் டிசம்பர் 15 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும்.தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.   அதேபோல் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட வலியுறுத்தியது

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கபட்டுள்ள சீலை அகற்றக்கோரி மனுதாக்கல் செய்தது.அந்த மனு விசாரணைக்கு வந்தது.ஸ்டெர்லைட் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.  அதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கே.எஸ்.அர்ஜுனன் மனுவையும் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. அதில், இந்த ஆலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஆலையை திறக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ தூத்துக்குடி மாவட்ட செயலாளர்‌  கே.எஸ்‌.அர்ச்சுனன்‌ தரப்பில்‌ மூத்த வழக்கறிஞர்‌ என்ஜிஆர்‌.பிரசாத்‌ கே.எஸ்.அர்ஜுனன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத்,  ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்‌ வைத்தார் , அவர் வாதிடுகையில் ஸ்டெர்லைட் நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து தாமிர உற்பத்திக்கான மூலப்பொருட்களை தூத்துக்குடியில் இறக்குமதி செய்வதாகவும்  அதில் 36 விழுக்காட்டை மட்டுமே இந்தியாவில் பயன்படுத்துவதாகவும் மீதம் உள்ள 64 விழுக்காட்டை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் ஸ்டெர்லைட் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தனியார் நிறுவனம், மற்றும் இதே உற்பத்தியை செய்யும் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் நிறுவனமும் செயல்பட்டு வரும் நிலையில் ஸ்டெர்லைட் மட்டுமே இந்தியாவின் தேவையை பூர்த்திசெய்வதாக கூறுவது திசைத்திருப்பலான வாதமாகும். ஸ்டெர்லைட் இறக்குமதி செய்யும் காப்பர்கான்ஸன்ட்ரேட் எனப்படும் மூலப்பொருளில் ஆர்சனிக், வெள்ளி, தங்கம் உள்ளிட்ட பல உலோகங்கள் உள்ளன. இதில் தங்கத்தையும் வெள்ளியையும் பிரித்தெடுத்து விற்பனை செய்து லாபம் ஈட்டும் ஸ்டெர்லைட் , ஆர்சனிக் என்ற நச்சுத்தன்மை கொண்ட வேதியல் தனிமம் என்ன செய்யப்படுகிறது என்று இதுவரை சொல்லவில்லை. 2013லிருந்து 2018 வரையில் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான டன் எடைகொண்ட ஆர்சனிக் என்ன ஆனது என்ற விளக்கம் இதுவரை நிர்வாகம் சொல்ல வில்லை. தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13பேர் கொல்லப்பட்டதால் தான் ஆலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 2013 லிருந்து 2018வரை இதன் அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான அனுமதி ஸ்டெர்லைட் நிறுவனம் பெறப்படவில்லை. சுமார் 5 ஆண்டுகள் வரை அனுமதிசான்று பெறாமல் ஸ்டெர்லைட் நிறுவனம் எவ்வாறு செயல்பட்டு லாபம் ஈட்ட முடிந்தது. கம்பெனிஸ் ஆக்ட் 2013ல் போடப்பட்ட புதிய விதியின் படி. எந்த நிறுவனமும் தனது லாபத்தில் 2 விழுக்காடு சமூகபாதுகாப்புநிதியாக வைத்து மக்களுக்கு  செலவு செய்திருக்கவேண்டும் ஆனால் இங்கு அவ்வாறு செய்யப்படவில்லை. 2018ல் ஆலை மூடிய பின்னர் மக்களை தாஜா செய்வதற்காக வழிபாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதாக சொல்வது ஏன். இதனால் மக்களிடையே மோதலை ஏற்படுத்த இந்நிறுவனம் முயல்வதாக சந்தேகம் எழுகிறது. ஸ்டெர்லைட் திறக்கப்படுவதால் சமூகத்தின் வளர்ச்சி மேம்படும் என்று கூறுவது அபத்தமானது. இது சமூகத்தின் தேவைக்கானது அல்ல அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கானது. சுற்றுச்சூழலை அழிப்பது தான் வளர்ச்சி என்று கூறும் கார்ப்ரேட்களின்  கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என சிபிஎம் தரப்பில் தனது வாதங்களை மூத்த வழக்கறிஞர்‌ என்ஜிஆர்‌. பிரசாத்‌ முன்வைத்தார்.  அவருடன்‌ வழக்கறிஞர்கள்‌ சுப்பு முத்துராமலிங்கம்‌, பர்வீன்பானு, சிபிஎம்‌  தூத்துக்குடி மாவட்ட செயலாளர்‌ கே.எஸ்‌.அர்ச்சுனன்‌ ஆகியோர்‌ ஆஜராகினர்‌.

 

 


 


 


Previous Post Next Post