கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் வெறி நாய்கள் தாக்குதலால் பொதுமக்கள் அச்சம்


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் வெறி நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி அதிகாரியின் உத்தரவின்பேரில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க உத்தரவு போடப்பட்டு கு.க செய்யப்பட்டது .ஆனால் இப்போது அந்த நடைமுறையை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை உதவியுடன் செய்யவேண்டிய இந்த பணிகளில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.



இதனால் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமான பஸ் நிலையம், மார்க்கெட், ஈரோடு சத்தி மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது, பாதசாரிகளை பள்ளி மாணவ மாணவிகளின் துரத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நாய்களுக்கு கு.க செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இதைப் பற்றி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறிய போது ஒரு நாய்க்கு கு.க மற்றும் மருத்துவ பராமரிப்பு செய்ய ரூ 450 செலவு ஆகிறது, நிதிப் பற்றாக் குறை மற்றும்  வேலைப்பளு காரணமாகவும் கவனிக்க முடியவில்லை என்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மூலமாக செய்ய வேண்டுமென்றும் மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனக் கூறினார்.


 


 


Previous Post Next Post