காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரிகள் தூர் வாரும் பணி மாவட்ட ஆட்சியர் தலைவர் பா.பொன்னையா கொடிசைத்து  துவைக்கி வைத்தார்


 

காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரிகள் தூர் வாரும் பணி மாவட்ட ஆட்சியர் தலைவர் பா.பொன்னையா கொடிசைத்து  துவைக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தலைவர் பேசுகையில்  செம்பரம்பாக்கம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்குவது  முக்கியமான ஏரி  ஒன்றாகும்.

 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும், நீரின் கொள்ளளவை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏரியை தூர்வார தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி ஏரியின் மொத்தம் நீர் பரப்பு 2316 எக்டேர் உள்ளது. இதில் ஏரி தூர் வாரும் பணி 151.80 இலட்சம் கண் மிட்டர், எர்குரைய 25.30 இலட்சம் லாரி மணல் லோடுகள் எடுத்து செல்ல   படுகிறது. இது முதலாம் ஆண்டு தொடர்ந்து  இப் பணி எடுத்து செஞ்சி 8  வருடம்  காலம் ஆகும் .

 

இவ்வளவு மணல் லோடுகள் வெளியேற்ற வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்கும் வகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள 2316ஹெக்டேர் பரப்பளவில் தூர் வாரும் பணியின் மூலம் 536 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்க முடியும், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடி நீரில் 536 மில்லியன் தூர்ந்து போய் மண் உள்ளது. தூர் வாருவதன் மூலம் 536 மில்லியன்  கன அடி நீர் மீட்கப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டப்படும் எனவும் தெரிவித்தார். 

 

இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பழனிசாமி , கொசள்தடையாறு வடிநில கோட்டம்  ரமேஷ், கொசள்தடையாறு வடிநில உதவி செயற் பொறியாளர்  சத்யநாராயணன் , உதவி பொறியாளர் செம்பரம்பாக்கம்   பணி பிரிவு  அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post