வேப்பூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் பணம் ஒரு லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள சிறுப்பாக்கம் ஊராட்சியில் மாரியம்மன் கோயில் உள்ளது. 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  அது முதல் தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மர்மநபர்கள் யாரோ கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் பிரார்த்தனைக்காக அம்மனுக்கு அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

 

உண்டியலில் இரண்டு லட்சம் ரூபாய் பணமும் ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகளும் இருந்திருக்கலாம் என கூறுகின்றனர். இதுகுறித்து சிறுப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்து அதன் பேரில் கோயில் உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.