கடலூரில் டாக்டர் அப்துல்கலாம் பிறந்த தினவிழா

கடலூரில் டாக்டர் அப்துல்கலாம் பிறந்த தினவிழா கொண்டாடப் பட்டது.  

 


 

கடலூரில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் தின விழா கடலூர் நகர அரங்கத்தில்  நடைபெற்றது. விழாவிற்கு  கடலூர் தலைவர் சந்திரசேகர், முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் முருகன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 


 

சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ்  கலந்துகொண்டு குழந்தைகள் வான் பார்க்க கோளரங்கை தொடங்கிவைத்துசிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை  கடலூர் நெல்சன் ஒருங்கிணைத்தார். பிற்பகலில் கலாம்பிறந்த நாள் தின விழா சிறப்பு நிகழ்ச்சியாக விஞ்ஞானி உடன் சந்திப்பு என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது .

 


 

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஜ எஸ் ஆர் ஓ டாக்டர்  ராஜசேகர் நிகழ்ச்சியை நடத்தினார்.நெல்லிக்குப்பம் எடிபை பள்ளியின் தாளாளர். எஸ். சீனிவாசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை ஜோஸ் மகேஷ் ஒருங்கிணைத்தார். இந்த அமர்வில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் அறிவியல் கண்காட்சியும் நடைபெற்றது. பின் மாலையில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவ்விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post