சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் தினமும் கொட்டித்தீர்க்கும் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் தினமும் கொட்டித்தீர்க்கும் கனமழை கோவிலை மூடி செல்லும் தண்ணீர் பெரும்பள்ளம் அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் பெரும்பள்ளம் அணை நிரம்பி வருகிறது இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அடிவாரத்தில் கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பெரும்பள்ளம் அணை 36 அடி உயரம் கொண்ட பெரும்பள்ளம் அணை யில் 1.15 டிஎம்சி நீர் இருப்பு வைக்க முடியும்,ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக மழை இல்லாததால் பெரும்பள்ளம் அணை நிரம்பவில்லை இந்நிலையில் கடம்பூர் அத்தியூர் கம்பத்து ராயன் மலை இருட்டி பாளையம் உள்ளிட்ட மலைப் பகுதியில் பெய்த மழைநீர் கடந்த இரண்டு நாட்களாக கடம்பூர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது அம்மன் கோவிலின் மேல் பகுதி உள்ள அருவியில் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய் வந்து விழுவதால் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது சாலையில் ஏராளமான தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த மழை தட் பெரும்பள்ளம் அனைக்கு வந்து சேர்வதால் அணையில் தற்போது பாதி அளவு 15 அடியை எட்டியுள்ளது இதனால் இப்பகுதியில் உள்ள குளங்கள் கிணறுகள் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்