கடலூரில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா
கடலூரில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஐபிஎஸ் அவர்கள் திறந்து வைத்தார்.

 


 

கடலூர் சீமாட்டி சிக்னல் பாயிண்டில் நவீன டிஜிடல் போக்குவரத்து சிக்னலை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் ஐபிஎஸ் அவர்கள் திறந்து வைத்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட சிக்னலில் நில் கவனி செல் போன்ற குறியீடுகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இது வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து வரும் பயணிகள்  எளிதில் படித்து தெரிந்து கொள்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சிக்னல்களிலும் உள்ள குறியீடுகள் இதில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் ஞானவேல் பொறியாளர் கௌதமன் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் சதீஷ் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்