மல்லசமுத்திரத்தில் விஜய் மன்ற மாநில பொறுப்பாளர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் இணைந்து நலதிட்ட உதவிகள் வழங்கினர் 
மல்லசமுத்திரத்தில் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் இணைந்து நலதிட்ட உதவிகள் வழங்கினர்.

 


 

பிகில் திரைப்படத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் மன்ற மாநில பொறுப்பாளர்  மல்லசமுத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைமை சார்பாக தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் S.பிரவீன்குமார்  தலைமையில்70,000 மதிப்புள்ள மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த காவல்துறை துணை. கண்காணிப்பாளர் M.சண்முகம் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

 


 

பின்பு பெயர் பலகை திறந்து வைத்து விலையில்லா தலைக்கவசம் வழங்கினார். இவ்விழாவிற்கு திருச்செங்கோடு நகர இளைஞரணி தலைவர் A.முபாரக் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினார். மேலும் நாமக்கல் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெ.ஜெ. செந்தில்நாதன்  தளபதி மக்கள் இயக்க கொடி ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.  நலத்திட்ட உதவிகளான தலைக்கவசம் 50 நபருக்கும், அன்னதானம் 300 நபருக்கும், 5 கிலோ அரிசி பொதுமக்கள் 30 நபருக்கும், பிரஷர் குக்கர் 10 நபருக்கும் ,வேட்டி மற்றும் சேலை 40 நபருக்கும்,பிளாஸ்டிக் குடம் 30 நபருக்கும், சில்வர் தட்டு 20 நபருக்கும் ,மாணவர் மாணவியருக்கு நோட்டு புத்தகம் 20 நபருக்கும் மற்றும் வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. 

 


 

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட K. பழனியப்பன் காவல் ஆய்வாளர் ,M. ராஜேந்திரன் காவல் உதவி ஆய்வாளர், வழக்கறிஞர் T.V.M. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மற்றும் திருச்செங்கோடு நகர இளைஞரணி பொருளாளர் நாகராஜ், திருச்செங்கோடு ஒன்றிய இளைஞரணி தலைவர் மோகன் மற்றும் எலச்சிபாளையம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுதாகர் உடனிருந்தனர்.மேலும் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர,ஒன்றிய இளைஞரணி தலைமை மற்றும் கிளை நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் நினைவு பரிசுகளை மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக வழங்கப்பட்டன.  மேலும் மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர்  P.ஜெகதீஷ் மற்றும் பொருளாளர் S.ஃபாருக் நன்றியுரை வழங்கினார்கள் 

 

 


 

Previous Post Next Post