கார்மாங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு

கார்மாங்குடி கிராமத்தில் கோவை வேளாண்மை பல்கலை கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 


 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவிற்கு உட்பட்ட கார்மாங்குடி கிராமத்தில் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கார்மாங்குடி வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

 


 

சிறப்பு அழைப்பாளராக கோவை வேளாண் பல்கலைக் கழக தலைவர் பேராசிரியர் சோமசுந்தரம்,  ஜான்சிராணி, கணேசன், சுனிதா ஆகியோர் கலந்து கொண்டு மண்புழு எரு தயாரித்தல், பூச்சி விரட்டி , இயற்கை களைக்கொல்லி, மீன் அமினோ அமிலம்,  வேப்பங் கொட்டை சாறு,  இஞ்சி பூண்டு கரைசல் ஆகியவை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளித்தனர். பின் விவசாயிகளுக்கு மண்புழு எரு தயாரிக்க கூடிய பொருட்களால் மண்புழு பாலிதீன் தொட்டி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் கோவை வேளாண் பல்கலை கழகத்தை விவசாயிகள் பார்வையிட நேரில் அழைத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் உழவர் மன்ற உறுப்பினர் முன்னோடி விவசாயி பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Previous Post Next Post