கார் டயர் வெடித்து விபத்து - இருவர் பலத்த காயம்

கார் டயர் வெடித்து விபத்து - இருவர் பலத்த காயம்.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர்   அருகே திருவண்ணாமலையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் முன்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கட்டையிலே ஏறி  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

 


 

இதில் காரில் பயணம் செய்த  திருவண்ணாமலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் திருமூர்த்தி இருவரும் பலத்த காயம் அடைந்து காரின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த அவ்வழியே  சென்ற பொதுமக்கள் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.