நல்ல விஷயங்களை செய்து முன்மாதிரியாக திகழ வேண்டும் : திருப்பூரில் ஒன்றிணைந்த டிக் டாக் நண்பர்கள்

டிக்டாக் செயலி மூலமாக ஒருங்கிணைந்த நண்பர்கள் திருப்பூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிரியாணி சமைத்து விருந்து விருந்து வைத்தனர். ஆதரவற்றோர் இல்லத்தை கட்டவும் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்தனர்.டிக்டாக் செயலி மூலமாக பல்வேறு கலாச்சார சீரழிவுகள் நடைபெறுவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவரும் நிலையில் அச்செயலியில் அன்பு பயணம் என்ற குழுவை உருவாக்கிய திருப்பூரைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் மைக்கேல், சிவா இளையராஜா, நந்தகுமார் என்ற நால்வரும் நலத்திட்ட உதவிகள் ஆர்வத்துடன் முயற்சி எடுத்தனர். இவர்களது இந்த முயற்சிக்கு டிக் டாக் செயலியில் இருந்த பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை இந்த அமைப்பினர் செய்து வந்தனர்.அதன்படி இன்று திருப்பூர் மகாத்மா அன்பு இல்லத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு அமைப்பினர் ஒன்றாக இணைந்து பிரியாணி சமைத்து பரிமாறி மகிழ்ந்தனர்.மேலும் இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் மேம்படுத்தி கட்டுவதற்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்தனர். இதில் கவின் என்ற சிறுவன் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தையும் இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவியாக வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு அன்பு பயணம் சார்பில் 72 பேர் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்தனர்.  டிக்டாக் செயலி மூலம் பல அசம்பாவிதங்கள் நடப்பதாக கருத்துக்கள் நிலவி வருகிறது. எந்த செயலியையும் நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் நன்மை தீமை உள்ளது.இதுபோல சமூக தளங்களில் ஒன்றிணைந்த நண்பர்கள் மூலமாக நல்ல விஷயங்களையும் செய்ய முடியும் என்பதற்கு எங்கள் அமைப்பு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் குறிக்கோளாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.