வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் குழு பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் !!

திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மைதுறை சார்பில் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர்  உற்பத்தியாளர்  குழுக்கள் மற்றும் பண்ணை இயந்திர விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர்  தலைமையில் நடைபெற்றது. கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்தில் 100 சிறு குறு விவசாயிகளை கொண்டு உழவர்  உற்பத்தியாளர்  குழுக்கள் அமைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் 23 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தோட்டக்கலைத்துறையில் 6  உழவர்  உற்பத்தியாளர்  குழுக்களும் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதற்க் கட்டமாக ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக நிலம் கொண்ட ஒரே பயிரினை சாகுபடி செய்யும் 20 சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைந்து ஒரு விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்படவேண்டும்.


இவர்களில் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு உறுப்பினரின் பங்கு தொகையாக (ரூ.1000/-) ஆயிரம் ரூபாயும், உறுப்பினர்  சந்தாவாக (ரூ.100/-) நூறு ரூபாயும் செலுத்தப்பட்டு குழுவிற்கான வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கப்படவேண்டும். இரண்டாம் கட்டமாக வட்டரா அளவில் ஒரே பயிர் வகைகளை சாகுபடி செய்யும் ஒரே கிராமத்தில் ஐந்து உழவர் ஆர்வலர் குழக்களை இணைத்து 100 பேர்  கொண்ட உழவர்  உற்பத்தியாளர்  குழுக்களை தொடங்கப்படவேண்டும். அடுத்த நிலையாக ஒவ்வொரு 10 உழவர்  உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து      1000 பேர்  சிறு குறு விவசாயிளை கொண்ட உழவர் உற்பத்தி நிறுவனத்தை ஏற்படுத்தி, உற்பத்தியாளராக விளங்கும் விவசாயிகளையே தொழில் முனைவோராக முன்னேர வாய்ப்பளிக்கப்படுகிறது.அனைத்து உழவர் ஆர்வலர் குழு மற்றும் உழவர்  உற்பத்தியாளர்  குழுவும் ஒவ்வொரு மாதமும் கூடி தங்கள் வயல்வெளி அனுபவங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும் பகிர்ந்துகொண்டு அடுத்து மேற்க்கொள்ளவேண்டிய கூட்டுப்பண்ணையத்திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும். 2019-20 ஆம் ஆண்டு தொடங்க்கபட்டுள்ள ஒவ்வொரு உழவர்  உற்பத்தியாளர்  குழுவிற்கும் தொகுப்பு நிதி ரூ.5,00,000/-  (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) தமிழக அரசு வழங்கியுள்ளது.


அந்த நிதியை கொண்டு உழவர் உற்பத்தியாளர்   குழு உறுப்பினர்கள்  விவசாயத்திற்கு தேவையான பண்ணை கருவிகளை வாங்கி பயன்பெற வழிவகை செய்வதற்கு வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் குழு பிரதிநிதிகள் கலந்தாய்வு  கூட்டமானது நடத்தப்பட்டது விவசாயிகளுக்கு பெரிதும் பயன் உள்ளதாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.  நிறுவனங்கள் விவசாயிகள் நலன்கருதி விற்பனை விலையில் இருந்த குறைந்த அளவு குறைத்து கொள்முதல் செய்ய குழுக்களுக்கு சலுகை வழங்கியுள்ளது.