திருப்பூர் தெற்கு தொகுதியில் ரூ. 2.65 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் எம்.எல்.ஏ., சு. குணசேகரன் துவக்கி வைத்தார்


திருப்பூர் தெற்கு தொகுதியில் ரூ. 2.65 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள்


எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்

 


 

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் 6 இடங்களில் ரூ. 2.65 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சியில் 39 வது வார்டுக்குட்ப்பட்ட ஏ.எஸ்.நகர் 7, 8 வது வீதிகளில் ரூ.25.10 லட்சம் மதிப்பில் தார்தளம் அமைக்கும் பணிகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதே வார்டில் உள்ள ஆர்.வி.இ., நகர் 7, 8 வது வீதிகளில் ரூ.65.40 லட்சம் மதிப்பில் மழைநீர்வடிகால், சிறுபாலம், தார்சாலை அமைக்கும் பணிகளையும் அவர் துவக்கி வைத்தார். இதே போல, 

 


 

திருப்பூர் கே.வி.ஆர்., நகர் மாநகராட்சி பள்ளியில், எம்.எல்.ஏ., நிதி ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட வகுப்பறைகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் 

திறந்து வைத்தார். மேலும், 40  வது வார்டில் உள்ள பாண்டுரங்கன் காலனி பிரதான சாலையில் ரூ.56.35 லட்சம் மதிப்பில் தார்தளம் புதுப்பிக்கும் பணிகள், அமர்ஜோதி கார்டன் பிரதான சாலையில், ரூ.69 லட்சம் மதிப்பிலான தார்தளம் அமைக்கும் பணிகள், பத்மினி கார்டன் மேற்கு 1 வது வீதியில் ரூ.22.50 லட்சம் மதிப்பில் மறுதார்தளம் அமைத்த்தல் மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர் டெக்ஸ்வெல் முத்துசாமி, வி.ஜி.பி. பாலு, அர்பன் பாங்க் தலைவர் சடையப்பன், மாநகராட்சி உதவி பொறியாளர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.