31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழா !!

31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கலெக்டர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில் நடைபெற்றது.மாண்புமிகு தமிழக முதல்வர்  விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் தமிழ்நாடு விபத்தில்லாத மாநிலமாக உருவாகி வருகிறது அதன்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டு மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 20.01.2020 அன்று தொடங்கப்பட்டு மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்திட  பேரணிகள் , பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் , கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்  நடத்தப்பட்டன. இதுபோன்று வருங்காலங்களில் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆண்டிற்கு ஒரு கோடி மக்கள் வருகை புரிந்து செல்கின்றனர். இதனால் அதிக போக்குவரத்து நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. இக்காரணத்தினால் விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகத்தால் பல தொடர் நடவடிக்கைகள் காவல் மற்றும் போக்குவரத்து துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க முடியும்.விபத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் இருப்பதே . அவ்வாறு சாலை விதிகளை  கடைப்பிடிக்காமல் வாகனத்தை இயக்கும் நபர்களால் சாலை விதிகளை சரியாக பின்பற்றும் நபர்களுக்கும் விபத்து ஏற்படுகிறது.மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, கைபேசியை பயன்படுத்தி கொண்டு வாகனம் இயக்குவது , சீட் பெல்ட் அணியாமல் பயணம் மேற்கொள்வது, அதிக வேகம் , இருசக்கர வாகனத்தில் அதிக எடை மற்றும் அதிக நபர்கள் அமர்ந்து ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்வது இதுபோன்ற செயல்களால் அதிக விபத்து  ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களில் உங்கள் குழந்தைகள் பெற்றோர்கள் நண்பர்கள் ஈடுபட்டால் அவர்கள் ஈடுபடாமல் இருக்க அறிவுரை வழங்குவது ஒவ்வொருவரின் கடமையாகும் மேலும் நாம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக சாலை விதிகளை கடைபிடித்து வாழ்ந்திட வேண்டும் என பேசினார்


தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் அவர்களால் பத்தாண்டு விபத்து ஏற்படுத்தாமல் வாகனம் இயக்கிய தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறை ஓட்டுநர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தால் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கும், சாலை பாதுகாப்பில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு அவர்களைப் பாராட்டி பரிசுகளும் கேடயங்களும மற்றும் சான்றிதழகள் வழங்கப்பட்டன.


இவ்விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.லயோலா இக்னேஷியஸ்,வட்டார போக்குவரத்து அலுவலர்  கா.செல்வகுமார்,    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம கோட்ட மேலாளர்  பா.தமிழ்மாறன், மாவட்ட கல்வி அலுவலர்  கே.முத்துசாமி, பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர்  இரா. மாணிக்கம், மற்றும் அரசு அலுவலர்கள் ,ஆசிரியர்கள் ,  பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.