அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள முருகன் புதூர் பெண்கள் மேல்நிலை பள்ளி , நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி, மொடச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி,பழனியம்மாள் மேல்நிலை பள்ளி, வைரவிழா மேல்நிலை பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியானது கலெக்டர்  கதிரவன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி, கோட்டாட்சியர் ஜெயராமன், ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் சேர்மன் கந்தவேல்முருகன்,சொசைட்டி தலைவர் காளியப்பன், பிரினியோகணேஸ், செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.