குழந்தை பற்றி தகவல் தெரிவிக்க திருப்பூர் மாவட்ட காவல்துறை வேண்டுகோள்

திருப்பூர்  மாவட்டம்  பல்லடம் காவல் நிலைய  சரகத்தில்  உள்ள   மங்கலம் ரோடு அரசங்காட்டில்  குடியிருக்கும்  சுடலை முத்து-30  த/பெ. மாரியப்பன் என்பவருக்கு  திருமணமாகி   3 வயதில்  மகாலட்சுமி  என்ற  பெண் குழந்தை  உள்ளது. அவரது  மனைவி செல்வியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக   அவரது  மனைவி. குழந்தையையும்  கணவரையும்  விட்டு பிரிந்து போய்விட்டார். சுடலை முத்து  கார்பெயிண்டராக வேலை செய்து வருகிறார். அவரது  குழந்தையை  அவரது அப்பா மாரியப்பனிடம் விட்டு  கவனித்து வந்துள்ளார்.  கடந்த  23.01.2020 ம் தேதி   மாரியப்பன்  அவரது பேத்தி மகாலட்சுமியுடன்  பழனி கோவிலுக்கு  அழைத்து சென்று  2401.2020 ம் தேதி  மதியம் சுமார் 1 ½ மணிக்கு  திரும்பி  வரும் போது அவர்களுடன்  சுமார் 30 வயது மதிக்கதக்க  ஒரு பெண்ணை  அழைத்து கொண்டு  வீட்டிற்கு வந்துள்ளார். மாரியப்பன்   மது அருந்தி விட்டு  போதையில்  படுத்து விட்டார். அவருடன்  வந்த பெயர். முகவரி தெரிய பெண் மாலை சுமார் 3 ½ மணிக்கு  அந்த  குழந்தையை  கடத்திக்கொண்டு  எங்கோ சென்று விட்டார். பக்கத்தில் குடியிருக்கும்  கறிக்கடைகாரரின் மனைவி மாரியப்பனிடம் நீ  அழைத்து  வந்த பெண் மற்றும்  குழந்தையை  காணோம் எங்கே  என்று கேட்ட போது   அந்த பெண்ணையும். குழந்தையும்  காணோம் என்று   மாரியப்பன் தனது மகனிடம் கூறியுள்ளார். மகன் அக்கம் பக்கம்  தேடிபார்த்து விட்டு  கிடைக்காத காரணத்தினால் இரவு  9 மணிக்கு  பல்லடம் காவல் நிலையம் வந்து புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்று பல்லடம் காவல் நிலைய குற்ற எண். 104/2020  u/s. 363 IPC யின் படி  வழக்கு பதிவு செய்து  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்ளின் உத்திரவு படி  பல்லடம் காவல் நிலைய  காவல் ஆய்வாளர் தலைமையிலும் 2 காவல் உதவி ஆய்வாளர்  விஜயகுமார் மற்றும்  அமுல் ஆரோக்கியதாஸ்  தலைமையில் . 3 காவலர்கள் மற்றும்  சைபர் கிரைம் 2 காவலர்களுடன்  தனிப்படை  அமைத்து  தேடி  வருகிறார்கள். மேற்படி குழந்தை பற்றியோ. கடத்தி செல்லும் பெண் குறித்தோ   தகவல் தெரிவித்தால்  கீழக்கண்ட  தொலைபேசி எண்களுக்கு  தெரிவிக்கவும்


 


 


 காவல் துணைகண்காணிப்பாளர்       9443672486


பல்லடம்


காவல் ஆய்வாளர். பல்லடம்              9498185600


காவல்  உதவி ஆய்வாளர்கள்             9498176902,9884887488


பல்லடம் காவல் நிலையம்                 9498101343  


திருப்பூர் மாவட்டம் தனிப்பிரிவு         9498101320


Previous Post Next Post