காதலுக்கு தூது போன தங்கையை கர்ப்பிணியாக்கிய அண்ணன் கைது!

தாராபுரம் அருகே காதலுக்கு தூது போன தங்கையை கர்ப்பிணியாக்கிய அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது


 


  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் காவல் சரகம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் 26 கூலி தொழிலாளி இவர் குடியிருக்கும் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீதேவி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சந்திரசேகரன் ஸ்ரீதேவியை காதலித்து வந்துள்ளார் இவர்களது காதலுக்கு சந்திரசேகரனின் பெரியப்பா மகளும் தங்கை முறையிலான பிரியா16 (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) காதலர்களுக்கிடையே தூதுவராக செயல்பட்டு வந்த நிலையில் காதலர்கள் சந்திரசேகரன் தேவி சந்திப்புக்காக தனது பெரியப்பாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சந்திரசேகரன் தங்களது காதலுக்கு துணை சென்ற தங்கை பிரியாவை அடிக்கடி மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார், இதனால் 6 மாத கர்ப்பிணியான பிரியாவின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட அவரது தாயார் இதற்கான காரணம் குறித்து கேட்ட போது நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் மைனர் பெண்ணான பிரியா கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாவின் பெற்றோர் குண்டடம் போலீசில் புகார் செய்தனர் வழக்கை பதிவு செய்த தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை தேடி வந்தனர் நிலையில் நேற்று சந்திரசேகரனை கைது செய்த போலீசார் தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போக்சோ சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர் காதலுக்கு தூது சென்ற தனது தங்கை முறையான பெண்ணையே கர்ப்பிணியாக்கிய அண்ணன் முறை வாலிபரின் செயல் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.