திருப்பூரில் கடும் பனி: திணறிய வாகனங்கள் - குளிரில் நடுங்கிய மக்கள் !!






திருப்பூர் மாநகரப்பகுதியில் இன்று காலை நிலவிய கடும் பனி மூட்டத்தால், பொதுமக்களும் வாகனஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்..

 

திருப்பூர் மாநகரப்பகுதிகளான அவிநாசி சாலை,  பல்லடம்சாலை, மங்கலம், தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 8.30 வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அதன்பிறகு, வெயில் வர வர பனிப்பொழிவு விலகியது.

கடும் பனிப்பொழிவால், பிரதான ரோடுகள் முழுவதும் பனி சூழ்ந்தும், சாலைகளில் படா்ந்தும் காணப்பட்டது. சாலையில் 100 மீட்டர் தொலைவுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில் சிரமம் இருந்ததால், வாகனப் போக்குவரத்தும் குறைந்தது. சாலையில் சென்ற வாகனங்களும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டுச் சென்றன.

 இதனால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். 

 தற்போது நிலவிவரும் பனிப்பொழிவால் வாகனஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டும், குறைந்த வேகத்தில் சென்றனா்.

  கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் குளிரால் பாதிப்பிற்குள்ளாகினர்,  காலை 8.30 மணி வரை ரோடுகளில் பனிமூட்டம் சூழ்ந்திருந்ததால் பொதுமக்கள் குளிரால் அவதிப்பட்டனர். ஸ்வெட்டர், போர்வைகள் அணிந்து ரோடுகளில் சென்றனர். பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்  பெற்றோர்கள் அவதிக்குள்ளாகினர் ரோட்டோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது பனித்தண்ணீர் மழைசாரல் போன்று படிந்து காணப்பட்டது


 

 



 

Previous Post Next Post